Wednesday, November 11, 2020

                                                         நண்பனின் இழப்பு 

நான் பெரும்பாலும்  பொது வெளியில் பல தினங்களுக்கு வாழ்த்து கூறுவதையோ ,சொந்த சுக துக்கங்களை பகிர்வதையோ தவிர்பதுண்டு, ஆனால் இன்று எழுதும் இதை பகிரத்தான்போகிறேன் . இது என் நண்பனின் இழப்பு என் தந்தையின் இறப்பு .

அப்பா இது நீங்க எனக்கு என்னவாக இருந்திங்க நான் உங்களுக்கு என்னவா இருக்கவேண்டும் என்று  ஆசைப்பட்டேன் எல்லாமும் தான். அப்பா இது ரொம்ப செயற்கை தனமாக இருந்தாலும் உங்ககிட்ட சொல்லாததை திரும்பவும் சொல்கிறேன் " you are my hero " 

நான் பிறக்கறப்போ உங்களுக்கு கிட்டத்தட்ட 36 வயசு . ரொம்ப வருஷமா அடுத்த பிள்ளை வேண்டாம் என்று இருந்து பிறகு பெற்ற பிள்ளை . நான் உங்க தாத்தாவை  தொட்டு கூட பேசுனது இல்ல ஆனா நீ என்ன இப்படி போட்டு வம்புக்கு இழுக்கிறனு சொல்லும் போது உங்களுக்கு அப்படி ஒரு கர்வம் இருக்கும் . நான் ஸ்கூலுக்கு போறதுக்குள்ள நீங்க 40 வயசை கடந்துடீங்க . எல்லாத்தையும் கணக்கு போட்டே பார்க்கிற என்னோட மனநிலைக்கு நான் நிலையா நிக்கறதுக்குள்ள அப்பாக்கு retirement வயசு வந்து விடும் இது அதுனு நிறைய யோசிச்சிருக்கன், 

உங்களுக்கு நான் சின்ன வயசில இருந்தப்ப என்ன எந்த வேலைக்கு கூட கூட்டிட்டு போனாலும் அது நல்லபடியா முடிஞ்சிரும்னு சொல்லுவீங்க நம்புனீங்க. அது சுத்தமா பொய் என பல தடவை சொல்லிருப்பேன்  , பாத்திங்களா உங்கள முதல்  தடவை என் வாழ்க்கையிலேயே நான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனேன் 9 /10 /2020 . வீட்டுக்கு உங்கள பிண வண்டியில தான் கூட்டிட்டு வந்தேன் . இந்த தடவையும் நான் தான் right . பள்ளி காலங்கள்ல என்ன தெரிஞ்சவங்களுக்கு நான் எதோ பெரிய அறிவாளின்னு நினைச்சிருப்பாங்க , ஆனா history  எக்ஸாம் நான் எழுத பயந்த அந்த இரவு புக்ஸ் தூக்கி வெச்சிட்டு வா என்று அந்த இரவு முழுக்க நீங்க என்னோடு கழிச்சது நினைவிருக்கு . எனக்கு அப்பாவை இழக்க நேரிட்டது பெரிய வலியா தெரியல ஆனா என் பேச்சு தொனி ல பேசாத என் இரவுகள்ல நான் என்ன நெனச்சிக்கிட்ருக்கேன் எனக்கு என்ன பிரச்சனை என துல்லியமாக புரிந்து கொள்ள முடிஞ்ச ஒரே உறவையும் இழந்துட்டேன் அப்பா . அதான் வலிக்குது, நீங்களும் நானும் முரண் பட்டது என் விருப்பத்துக்கு மாறா என்னை மருத்துவம் படிக்க கட்டாயப்படுத்திய அந்த ஒரு விஷயத்தில் மட்டும் தான் . 


ஒவ்வொரு வாழ்க்கை தருணத்தையும் நீங்க பல விதத்துல எனக்கு உணர்த்திருக்கிங்க, உங்க இறப்பை பற்றியும் நாம் பேசிருக்கோம் . நம்ம ரெண்டு பேருக்குமே சாவு பக்கத்தில் வந்து போனதுதான் . பேசாமல் இருந்திருப்போமா என்ன .யாருக்கு நான் என்ன செய்ய வேண்டும் உங்கள் கடைசி நிமிடங்களை நான் எவ்வாறு கொண்டு செல்லணும்னு  பல விஷயங்கள் . உங்கள் பலம் பலவீனம் ரெண்டுமே உங்க உறவுகள் தான் . சுயமரியாதையை இழக்குறிங்க என்று நான் கோவப்பட்டேன் உறவுகளை இழக்கிறேன் என்று நீங்கள் கவலைப்பட்டீர்கள் . அந்த கவலையே உங்களை விழுங்கியதோ என்னவோ ,appa take my words again THEY DIDNT DESERVE ALL THAT and YOU DIDNT DESERVE THIS EITHER. LOOK AT US NOW. இப்போ யார் யாரோ என்ன வேணும்னாலும் பேசலாம் ஆனா எங்களுக்கு நீங்க இல்ல . அம்மா எப்படி பா நீங்க இல்லாம இருப்பாங்க . என்னால பார்க்க கூட முடியலை தினமும் . பட்டன் கட்டி தராத சட்டை அப்படியே இருக்கு , வம்படியா எடுத்து வெச்சிக்கிட்ட என் சட்டையும் வேஷ்டியும் உங்க பீரோல அப்படியே இருக்கு . நீ வாழ்க்கைல ரொம்ப கஷ்டத்தையே பார்க்கிற இது நிச்சயம் மாறும்னு சொன்னிங்க இனி எது மாறினாலும் நீங்க இல்ல . "உன் கிளினிக்ல நான் டோக்கன்  கொடுக்கிறேன் டா, என்னால ஒட்டிட்டே இருக்க முடியல "- இனிமே இது கண்டிப்பா நடக்காது , ஆனா நீங்க நினைச்ச மாதிரி ஒரு வேலை நான் உயர்ந்தால் மருத்துவமனை பெயர் என்னனு எனக்கு தெரியும் பா NS MEMORIAL HOSPITAL. 

இதை எழுதிருக்க வேண்டாம் தான் .ஆனா உங்க இறப்பில் ,நண்பனின் நண்பனாக இருந்து இன்று உற்ற நட்பு போல பழகுகின்ற நண்பன் சொன்ன அந்த சில வார்த்தைகள் நம்பிக்கை தந்து சென்றது. இதுவும் யாருக்கேனும் எதோ ஒரு வகையில் எதோ ஒன்றை உணர்த்த உதவட்டும் . உங்ககிட்ட நிறைய  பேசிருக்கணும் , உடன் இருந்திருக்கணும் . எதுவுமே செய்யல . 9/10 விடியற்காலை 4  மணிக்கு CATH LABla என் விழிகளில் தேங்கி இருந்த பயமும் உங்க நெத்தியில் நான் குடுத்த அந்த கடைசி ஒற்றை முத்தமும் கொஞ்சமேனும் உங்களுக்கு சொல்லிருக்கலாம் , DEI THAGAPPA AM MISSING YOU TERRIBLY EACH PASSING DAY .  


Saturday, June 8, 2019

                               கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்கள் தான்

 பொதுவான ஒரு விடுமுறை நாளாக தான் இன்னைக்கும்  இருந்தது . மனைவி அம்மா வீட்டிற்கு சென்றதால் weekend shopping இல்லை .  கொஞ்சம் லேட்டா எழுந்து சாப்பிட்டு கொஞ்ச நேரம் படித்து , கரண்ட் இல்லாமல் மீண்டும் தூங்கி ஏறக்குறைய நாளும் முடிந்ததே விட்டது . அண்ணன் டின்னர் இட்லி என்று கேள்வி பட்டதும் வெளிய சாப்பிட போலாமானு ரொம்ப நேரம் யோசித்து ஒரு வழியாக பக்கத்தில் இருக்கும் LASSIWALA விற்கு போலாம் னு  முடிவு செஞ்சோம்  .(அண்ணியும் அவங்க அம்மா வீட்டிற்கு vacation :P  ) சாப்பாடு ஆர்டர் பண்ணி அத அங்க இருந்தவர் ஞாபகம் வெச்சி கொஞ்சம் கொஞ்சமா எடுத்துட்டு வந்து சாப்பிட்டு முடிச்சோம்னு வைங்க .இடையில் கை கழுவிய தண்ணிய  சென்னையில் மழை இல்லாத காரணத்தினாலே அத பக்கத்துல இருந்தவங்க முகத்துல மழையாய் துளி கூட சஞ்சலம் இல்லாமல் பொழியும் மாடர்ன் டே வருண பகவானை நொந்துக்கிட்டு சாப்பிட்டு முடிச்சோம் என்பது கூடிய தகவல் . பெருசா ருசி அளவில் குறைகள் இல்லாத சாப்பாடு . வெளிய வந்ததும் பக்கத்துல இருந்த பேக்கரில  பிரட் வாங்கிட்டு போலாம்னு நேராஅங்க போறோம் . இது வரைக்கும் ஏதோ ஒரு நாளாக இருந்தது இந்த பொழுதில் தான் திரும்ப பல மாமாங்கம் கழித்து blog எழுதணும் னு தோன வைத்ததுனு வைங்க.
                                     அண்ணனை பேக்கரி உள்ள பிரட்  வாங்க அனுப்பிச்சி விட்டு வெளிய வண்டியில் நான். சரியா எப்போ உள்ள போனாங்கனு பார்க்கல . வெளிய படியில் நடை தளர்ந்து அழுக்கு அப்பிய புடவையோட ஒரு மேரி பிஸ்கட் பாக்கெட் கையில வாஞ்சையா புடிச்சுகிட்டு ஒரு 80 வயசு இருக்க கூடிய பாட்டி கடையிலிருந்து இறங்குறாங்க. அந்த கடையோட படி பக்கத்திலேயே உக்காந்து தெரு விளக்கும், போற வர வண்டிங்க குடுக்கிற வெளிச்சத்துலயும் அதை பிரிச்சாங்க. அப்போ மணி ஒரு 9 45 -  10 . ஏன் அவங்கள பாத்தோனே கேக்கணும்னு தோணுச்சு தெரில .

" நைட் சாப்பிட்டீங்களா பாட்டி "

 உட்கார்திருந்தவங்க உடனே எழுந்து " இல்லையா, இங்க யாரும் பத்து ரூபாக்கு இட்லி தோசைலாம்  கூடுகிறது இல்லையா ". ஆமா. எனக்கு நைட் வீட்ல இருந்த அதே இட்லி தான் . பணம் இல்ல ,வாங்கி தரியானு  எந்த ஒரு கேள்வியும் இல்ல.

காரணம் தெரியாமயே மனசு கனத்தது . உடனே கையில் அகப்பட்ட நான்கு ஐந்து 10 - 20 ருபாய் நோட்டுகளை எடுத்தேன்.

மறுபடியும் " ஐயா ஏன் யா இவ்வளவு  பணம் . நாளைக்கு ஊரை பாக்க போயிடுவேன். போதும் யா  " 40 ரூபாய கையில கொடுத்தேன். மறுக்கல.

" நான் வாங்கி தந்திட்டு போகட்டுமா பாட்டி "

" எதிர்க்க தானயா இருக்கு நான் மெதுவா நடந்து போய் வாங்கிக்குறேன் "
 வேற எதுவும் அங்க பேச முடியாம வண்டிய எடுக்கறேன் . அண்ணனும் உக்கார்றாங்க .

மீண்டும் அந்த குரல் " ரெண்டு பேறும் வண்டில பாத்து போங்க கண்ணு"

திரும்பி பார்த்தேன் .அதே மங்கலான பார்வை, தளர்ந்த நடை ,துளியும் கண்ணியம் குறையாத அதே அழுக்கு தோய்ந்த புடவை, சின்ன சிரிப்பு.

அந்த தெருவை தாண்டும் வரைக்கும் விளக்கமில்லாத ஒரு நிறைவான அமைதி .அண்ணனுக்கும் அப்படி தான் இருந்திருக்கும் . அந்த ஒரு அமைதிய அண்ணன் சொன்ன வார்த்தைகள் நிரப்பின .

                              கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்கள் தான்.
                        YOU CANT EDUCATE AN IRON ORE  INTO GOLD- MARK TWAIN







Thursday, September 8, 2016

              12/2 (பாலா)ஜி சிங்க் தெரு 


தொன்னூறுகளின்  ஆரம்பம் அது 
என்னுடைய ஆரம்பமும் கூட
அசைவம் சாப்பிட அனுமதி இல்லை என்ற 
ஒரு காம்பௌண்டில் வசித்த அசைவம் உண்ணும் 
ஒரு குடும்பம்
ஒரு குடும்பம் தானா என்று உடன் வசித்தவர்களுக்கு
சந்தேகம் இருந்திருக்கலாம் . ;) 

ஆம் இரண்டே ரூம்களை கொண்ட ஒரு போர்ஷன் 
ஆனா இருந்தததோ என் ஞாபகத்துல மட்டும் 
8 பேரு.
எங்களோட சேர்ந்து அந்த காம்பௌண்டோட 
முதல் கலர் டிவி , முதல் டெலிபோனும் அங்க தான் 
இருந்ததுன்னு நினைக்கிறன் 
பல peculiar ஆனா மக்கள் இருந்தாங்க அதே காம்பௌண்ட்ல 

அங்க இருந்த முதல் பத்து வருஷம் தான் ரொம்ப 
சந்தோஷமான வருஷங்கள்னு நினைக்குறேன் 
பின்னாடி எனக்கு இருந்த பல பழக்கங்கள் உருவானது 
அங்க தான் 
(அப்டி என்ன நீ கிழிச்சிட்டனு உங்க mind வாய்ஸ் எனக்கு கேக்குது )

அப்ப எனக்கு தெரிஞ்சதுலாம் எனக்கு ரெண்டு அண்ணன்
பரணி அண்ணா , அருண் (அவனையும் அண்ணனு கூப்பிட சொல்லி அடிச்சும் பாத்தான் அழுதும்  பாத்தான் - அவன் கல்யாணத்துக்கு அப்பறமும் கூப்பிடலன்றது  வேற கதை )

அம்மா - யார் வந்தாலும் எத்தனை பெயரா இருந்தாலும் 
சமைச்சி போட மட்டும் தெரிஞ்ச ஒரு ஜீவன் .
அந்த காம்பௌண்ட்ல பல பேரோட குழந்தைங்களுக்கு 
டே கேர் எங்க அம்மா தான். default  ah  எல்லாருக்கும் அண்ணி 

அப்பா - அளவுக்கதிகமா பாசமும் எதிர்பார்ப்பும் எல்லார் மேலயும் வைக்கிற ஜீவன். சில பேருக்கு வக்கீல் சார் 
சில பேருக்கு பாலா அப்பா . எதுக்கு உழைக்கிறோம் யாருக்கு உழைக்கிறோம் னு தெரியாம உழைக்க மட்டும் தெரிஞ்ச ஒரு ஜீவன் .

சித்தா - எத்தனை பேருக்கு இந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியும் னு தெரில ஆனா அந்த காம்பௌண்ட் ல இருந்த எல்லாருக்கும் தெரியும் . என் சித்தப்பா
சித்தா பத்தி பெருசா எங்கயும் சொன்னதும் இல்ல செஞ்சதும் இல்ல . ஆனா நான் பண்ற பல விஷயம் அவங்க பாதிப்பில்லாம 
இருந்தது இல்ல இருக்கவும் முடியாது 
pets  மேல ஒரு ஈடுபாடு வர , கமல் மேல என்னன்னே தெரியாத ஒரு ஈர்ப்பு ஏற்பட , தாடி வளக்க ,இப்படி பல விஷயம் நான் பண்ண காரணமா இருந்தது சித்தா தான் 
infact அப்பாவோட நான் சித்தா கூட தான் அதிகம் சுத்திருக்கன் 
எல்லாருக்குமே சித்தா அங்க "தாடி" 

பரணி அண்ணா & அருண் - பரணி அண்ணா எப்பவுமே அங்க எல்லாருக்கும் ஒரு டார்கெட் . பரணி மாறி படி , சீக்கிரம் எழுந்திரு , வீட்லயே இரு . அண்ணா எடுத்த மார்க்ஸ் இன்னும் யாரும் கிராஸ் பண்ணல எனக்கு தெரிஞ்ச circle ல இருந்தும் அவங்க படிக்க நெனைச்சா மெடிசின் சேரல அவங்க .
கேசட்டை ரெகார்ட் பண்றது , கேப்ஸ் ல அப்பிளிகேஷன் போர்ம் fill up பண்றது னு அவங்களுக்கு தனி ஸ்டைல் 
அவங்க எங்களுக்கு மட்டும் அண்ணா இல்ல , நாங்க இங்க இருக்கும் போது யாருக்கு லெட்டர் எழுதுறாங்கன்றதை எல்லாம் புரிஞ்சிக்க ரொம்ப காலம் ஆச்சு 

அருண் - அவன் சொல்றது மாறியே நான் எந்த விஷயம் பண்ணாலும் அதோட ஆரம்ப புள்ளில  கண்டிப்பா என் அண்ணன் இருப்பான் . எல்லா கேம்ல என்கூட தோக்கறது , நான் கட்டு போட்டு பழக கால கிழிச்சிக்கிறது னு எல்லாத்துலயும் . எனிட் பிலிட்டான் எனக்கு introduce ஆனது லாம் 
அவனால தான் அப்போ பெரிய எதிரியும் அவனே தான் 

வேணி அத்தை - இப்போ நான் சாப்பாடா  தேடி போய் சாப்பிட காரணம் அப்போ அவங்க எதிர்த்த  வீட்டு நாயை காட்டி ஊட்டன சோறு தான் .

அப்போ unreservation  பயணம் கூட கஷ்டமா இருந்ததில்லை ,லீவு நாள் ல தெருல ஒரு வண்டி போக முடியாது அந்தளவுக்கு கூட்டம் சேர்த்து ஆட்டம் போடுவோம்  , ஊருக்கு போக ஆசை இருந்துச்சு , காய்ச்சாத தண்ணி குடிக்க பயந்ததில்ல , 
எல்லாரும் எங்க வீட்ல வந்து போன் பேசுனது தொந்தரவா தெரிஞ்சதில்லை ,இப்போ எல்லாமே மாறியாச்சு , 
தெருல பசங்க விளையாட்றத பார்க்கவே ரொம்ப அதிசயமா இருக்கு, பவர் பேங்க் ஷேர் பண்ணவே யோசிக்கிறோம்   , ஆயாசமா நாடு கடந்து பேசுற வசதி இருந்தும் பேசுறதே அரிதா இருக்கு , இது இன்னும் 20 வருஷத்துல எப்படி மாறி இருக்குமோ .


                               - பாலாஜி தெருவில் இருந்த பாலா ;)

Sunday, August 18, 2013

வெற்றி

                                                  வெற்றி

வெற்றி என்பதற்கு எதை அளவுகோளா ஒவ்வொருவரும்  கருதுறாங்க 
என்பதில் இருக்கிறது அதன் அர்த்தம்.
ஒரு பார்வை இல்லாதவறால அழகை உணரவே முடியாதுனு நினைச்சா 
அது நம் மடமை .அவனை மிகுந்த சாலை நெரிசலுக்கு நடுவே கடக்க உதவும் 
ஒவ்வொரு தோழனும் அவனுக்கு அழகானவனே.
பார்வை இல்லாமல் இருப்பினும்  அழகை உணர்ந்த அவன் ஒரு வெற்றியாளன் .அத்துணை நெரிசலிலும் அவனுக்கு உதவ முன் வந்தவனும் என் பார்வையில் ஒரு வெற்றியாளன்.

தனக்கு கீழே வேலை செய்பவனின் உயிரை, உழைப்பாய் உரிந்து 
பல கேள்ளிகைகளில் தான் மட்டும் ஈடுபடும்  முதலாளிகள்  மத்தியில்,
ஒரு வேலை உணவிற்காக ஓடாய்  உழைத்து உண்ண  அமரும் வேலையில் 
பக்கத்தில் சுற்றி திரியும் நாயிற்கோ பறவைக்கோ ஒரு கை உணவளிக்கும் 
ஒவ்வொருவனும் எனக்கு ஒரு வெற்றியாளன்.
என்னை  பொறுத்தமட்டில் வெற்றி என்பது யார் பந்தைய கோட்டை  முதலில் கடக்கிறார்கள் என்பதில் இருப்பதில்லை.
எப்பொழுது கடந்தாலும், கடக்கும் வேலையில் சிலவற்றை 
செய்ய தவறவிட்டோமே  என்று மீதம் இருக்கும் நாட்களில் ஒருவன் வருந்தாமல் மனநிம்மதியுடன் வாழ்வதுதான்.



Tuesday, July 23, 2013

                                                        குழப்பம்



அன்று ஒரு மழை நாள் .
நானும் என் நண்பனும்
சாலையில் நடந்து கொண்டிருந்தோம்
சாலையோர தேநீர் விடுதியில்
தேநீர் அருந்தினோம்
அங்கு ஒருவன் கையேந்தி கொண்டிருந்தான்
அதை பார்த்த மாத்திரத்தில் நண்பன் சொன்னான்
இவனை போன்ற பிச்சைகாரர்களால்  தான்
நம் நாட்டின் மதிப்பு கலங்கபடுகிறது என்று !!
ஆம் என்று நானும் தலை அசைக்க
எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்
அவரோ எங்களை நோக்கி ஓடிவந்தார்
பேசியது அவருக்கு கேட்டதோ என்ற அச்சம் என்னுள்
ஆனால் அவர் என் நண்பன் அங்கு மறந்திருந்த அலைபேசியை
அவனிடம் ஒப்படைத்து சென்றார்.
முன்பு என் நண்பனின் கருத்தை ஆமோதித்த நான் இப்பொழுது
யார் பிச்சைகாரன் என்ற குழப்பத்தில் மீண்டும் என் பயணத்தை தொடர்ந்தேன் !!!